முன்னுரை

அஷ்டாவக்ர கீதை அல்லது அஷ்டாவக்ர சம்ஹிதை என்னும் இந்த நூல், சத்தியத்தை உள்ளது உள்ளபடி உரைக்கும் ஒரு உன்னதமான நூல். இது மற்ற நூல்களில் இருந்து வேறு பட்டது. எந்தவித மழுப்பல்களும் சமாதானங்களும் சுற்றிவலைத்து சொல்லவேண்டும் என்ற நிர்பந்தங்களும் இல்லாமல் நேரடியாக கருத்துக்களை சொல்லும் நூல். இந்த நூலைப்பற்றிய கருத்துக்கள் "அஷ்டாவக்ர கீதையை பற்றி" என்ற தலைப்பில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் வரும் இரண்டு நபர்களான அஷ்டாவக்ரர் மற்றும் ஜனகரைப்பற்றி தெரிந்து கொள்ள மேலே "அஷ்டாவக்ரரைப்பற்றி" என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளதை படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த நூல் எந்த விளக்கங்களும் இல்லாமல் மூல சுலோகங்களை மட்டுமே படித்து அதன் பொருளை தெரிந்த கொள்ளக்கூடிய வகையில் எளிமையாக சொல்லப்பட்டுள்ளதால் மூல சுலோகங்களை மட்டுமே படிப்பதே சிறந்தது. ஆனால், சிலருக்கு சந்தேகம் வரும் இடங்களில் தெளிவு ஏற்பட ஏதுவாக இருக்கட்டும் என்று விளக்கவுரையும் இங்கே தனியாக கொடுக்கப்பட்டு உள்ளது.